ஜம்மு-காஷ்மீர்: மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது ​​ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் இன்றிலிருந்து 10 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கை விதித்துள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மாவட்ட நிர்வாகம், தனித்த மளிகை/காய்கறி/இறைச்சி/பால் கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் மற்றும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து ஸ்ரீநகரின் மாவட்ட மாஜிஸ்திரேட் முகமது ஐஜாஸ் அறிவித்துள்ள உத்தரவு படி, இன்று முதல் 10 நாட்களுக்கு, ஜடிபால் (எஸ்எம்சி வார்டு எண்: 55-ஹவால், 56-ஆலம்கரி பஜார், மற்றும் 63-கத்தி தர்வாஸ்) மற்றும் லால் பஜார் (எஸ்எம்சி வார்டு எண்: 59-லால்பஜார், 60-போட்சா மொஹல்லா, 61-உமர் காலனி) ஆகிய பகுதிகளில் கடுமையான கொரோனா ஊரடங்கு உத்தரவு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு விதிகள் பின்வருமாறு:

  • தற்செயலான சேவைகள் மற்றும் செயல்பாடுகள் உட்பட அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தொடர அனுமதிக்கப்படும்.
  • காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்களான தனி மளிகை/காய்கறி/இறைச்சி/பால் கடைகளும் திறந்திருக்கும் மற்றும் செயல்படும்.
  • சரக்குகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் சுமுகமான இயக்கத்திற்கு எந்த தடையும் இருக்காது.
  • அலுவலகப் பணிகளில் கலந்து கொள்வதற்கு அரசு அதிகாரிகளின் நடமாட்டத்திற்கு எந்த தடையும் இருக்காது.
  • அனைத்து வளர்ச்சி/ கட்டுமானப் பணிகள் தொடர அனுமதிக்கப்படும்.
  • தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படாது.
  • காலனிகளில் தடுப்பூசி வழங்க உள்ளூர் மொபைல் குழுக்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.