ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு நீட்டிப்பு.!

கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அங்கு கொரோனா தொற்று குறையாததால் ஊரடங்கை வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நீட்டித்து ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நேற்றைய நிலவரப்படி 613 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 20,972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan