திருச்சியில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.! 14 இடங்களில் அனுமதியில்லை

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கமானது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி அந்த போட்டி தான்.

அதனை தொடர்ந்து அடுத்ததாக மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைத்திங்கள் அன்று (அதாவது ஜனவரி 15-ம் தேதி) நடைபெற உள்ளது. அதைப்போல, பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்றால்  போட்டி நடைபெறுவதற்கு 20 நாட்களுக்கு முன்பே விண்ணப்பம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் 17 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி கோரப்பட்டு இருந்தது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புதிய மைதானத்துக்கு இதுதான் பெயர்!

இதனையடுத்து, திருச்சியில் எந்தெந்த இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்பதற்கான விவரமும் அதற்கான தேதியும் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 16-ல் சூரியூரிலும், ஜனவரி- 19 ஆம் தேதி  நவலூர் குட்டப்பட்டு மற்றும்  மணப்பாறையிலும் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.  மேலும், 17 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி கோரப்பட்டு இருந்த நிலையில் 3 இடங்களில் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 இடங்களில் அனுமதி அளிக்கப்படவில்லை.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.