ஜல்லிக்கட்டின் அசைவுகளை கழுகுபோல் கண்காணிக்க குழு- நல வாரியம் அதிரடி

  • தமிழகம் முழுவதும் ஜன.,15 முதல் கோலகலாமாக துவங்குகிறது ஜல்லிக்கட்டுத் திருவிழா
  • தமிழகத்தில்  நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. 

தமிழகம் முழுவதும் ஜன.,15 தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.பொங்கல் அன்று அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.பொங்கல் சிறப்பு என்றால் அதனோடு மங்காத வீரத்தினை எடுத்துரைக்கும் ஜல்லிக்கட்டு மற்றொரு சிறப்பாகும்.

அன்று சீறிப்பாயும் காளைகலும் அதனை அடக்க சீறிப்பாயும் இளங்காளையர்களும் என்று தமிழகமே ஜே ஜே என்ற கரகோஷத்திற்கு பஞ்சமிருக்காது.அவ்வாறு கலைக்கட்டும் திருவிழாவாக ஜல்லிக்கட்டு பார்க்கப்படுகிறது.ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதியை தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உறுதிப்படுத்திய நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதற்கான  வேலைகளை எல்லாம் ஆட்சியர்கள் முடிவிட்டு உள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை எல்லாம் கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் குழு ஒன்ரை அமைத்துள்ளது.அதன்படில் கால்நடை வளர்ப்புத்துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநராக பணியாற்றிய ரவீந்திரன் தலைமையில் தான் 15 பேர் கொண்ட  இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. வீரவிளையாட்டு மீட்புக் கழகத்தின் மாநில செயலாளர் ராஜேஷ் உட்பட 14 பேர்  இந்த குழுவின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha