14வது துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றார் ஜெகதீப் தன்கர்.!

14வது துணை குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, இம்மாதம் 6ஆம் தேதி துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது.

இதில், பாஜக மற்றும் அவர்களது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக  ஜெகதீப் தன்கர் தேர்தலில் வெற்றிபெற்றார்.

துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழா டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகளியில் இன்று நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில், பிரதமர் மோடி , முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உட்பட ,  முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

ஜெகதீப் தன்கர் இதற்கு முன்னர், வழக்கறிஞரராகவும்,  மேற்கு வங்க கவர்னராகவும் பதவியில் இருந்தார்.  கடந்த ஜூலை மாதம் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார்.

துணை குடியரசு தலைவரானவர், மாநிலங்களைவை அவை தலைவராகவும் பொறுப்பேற்று, அவையை சுமூகமாக நடத்தவும் செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளவர்.

முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு டெல்லியில் அரசு மாளிகை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இனி அவர் அங்கு தான் தங்குவார் என கூறப்படுகிறது.

.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment