உலகின் தொன்மையான நகரம் ஜெய்ப்பூர் – யுனேஷ்கோ அறிவிப்பு!

உலகின் தொன்மையான  நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் அமைப்பான யுனேஷ்கோ அறிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை பல தொன்மையான பல நகரங்கள் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிதாக ஜெய்ப்பூர் இணைந்துள்ளது. ஒவ்வொரு   நகரங்களின் அமைப்பு, கலாச்சாரம், கல்வி, அறிவியல் சூழல் மற்றும் தொல்பொருள் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நகரங்கள் எவ்வளவு முக்கியமானது என்று கணக்கீடு செய்யப்படும். இந்த கணக்கீடானது யுனேஷ்கோ எனப்படும் உலக பாரம்பரிய அமைப்பு அமைப்பால் நடத்தப்படும்.