சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி ஆஜராக வேண்டும் – சிபிஐ நீதிமன்றம்.!

  • சிபிஜ  2012 -ம் ஆண்டு மே மாதம் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்தனர். இதையடுத்து 16 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
  • நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மனு தாக்கல் செய்தார்.

ஆந்திர மாநில முதலமைச்சரும் , ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி மீது கடந்த 2011 -ம் ஆண்டு  வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக கூறி வழக்குப் பதிவு  சிபிஐ செய்தது.பின்னர் 2012 -ம் ஆண்டு மே மாதம் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்தனர்.இதையடுத்து 16 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஐதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதலமைச்சராக கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றார்.

அதனால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது  ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கைக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் “குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் , எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அனைவரும்  சாதாரண மனிதர்தான்.அதனால் ஜெகன் மோகன் ரெட்டி  வருகின்ற  10-ம் தேதி  நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என சிபிஐ நீதிமன்றம் உத்திரவிட்டது.

author avatar
murugan