பால்கனியில் நின்று பாடம் கற்பிக்கும் இத்தாலிய ஆசிரியர்கள்!

பால்கனியில் நின்று பாடம் கற்பிக்கும் இத்தாலிய ஆசிரியர்கள்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இத்தாலியில், கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில், தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.

இதனையடுத்து, அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் நேபிள்ஸின் நகரில், மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளதால், அங்கு அக்டோபர் இறுதி வரை பள்ளிகள்  மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திலேயே, மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை கவலையடைய செய்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர்கள், மாணவர்களை தெருக்களுக்கும், பால்கனிக்கு வரவழைத்து பாடம் கற்றுக் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘குழந்தைகள் எங்களை பார்க்கவும், எங்களுடன் நேரத்தை பகிர்ந்து கொள்ளவும், இந்த நடமாடும் பாடம் கற்பிப்பு முறை உதவியாக உள்ளது.’ என தெரிவித்துளார்கள்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.