டிவிட்டருக்கு மில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு.!

டிவிட்டரில் அரசுக்கு எதிராக பதிவிடும் பதிவுகளை தடுக்க (தணிக்கை செய்ய) டிவிட்டருக்கு மில்லியன் கணக்கான டாலர்களை கொடுத்தது. – எலான் மஸ்க்.

பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் தளத்தின் புதிய தலைமை அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின்னர் நாளுக்கு நாள் டிவிட்டர் தளமே பேசுபொருளாக மாறி வருகிறது. அந்தளவுக்கு தினம் தினம் புது புது செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் தான் டிவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து விலக வாக்கெடுப்பு நடத்தில் பயனர்கள் அவரை டிவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து வெளியேற அதிக வாக்களித்து விட்டனர். இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்ததாக புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தற்போது, அமெரிக்க அரசு , டிவிட்டரில் அரசுக்கு எதிராக பதிவிடும் பதிவுகளை தடுக்க (தணிக்கை செய்ய) டிவிட்டருக்கு மில்லியான் கணக்கான டாலர்களை கொடுத்தது என பதிவிட்டுள்ளார் . மேலும், அந்த பதிவில், டிவிட்டர் இணையதளம் போல மேலும் சிலசமூக வலைத்தளங்களுக்கும் அமெரிக்கா பணம் கொடுத்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார் டிவிட்டர் சிஇஓ எலான் மஸ்க்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment