அமெரிக்கா நிதியை நிறுவத்துவது மிகவும் ஆபத்தானது -பில்கேட்ஸ்.!

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் தினமும்  பலர் பாதிக்கப்பட்டு , உயிரிழந்து வருகின்றனர். இந்த வைரசால் 2,083,607 பேர் பாதிக்கப்பட்டும் ,134,632 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பிற்க்கு வழக்கும் நிதியை டிரம்ப் நிறுத்து வைத்துள்ளார்.கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில் டிரம்ப் உலக சுகாதார அமைப்பிற்க்கு நிதியை நிறுத்தியது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை மூடி மறைத்து தனது கடமைகளில் இருந்து உலக சுகாதார அமைப்பு விலக்கியதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் குற்றசாற்றாக உள்ளது. சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு கொரோனா பாதிப்புகளை உலக சுகாதார அமைப்பு மூடி மறைத்து விட்டது என  டிரம்ப் கூறுகிறார் .
இதனால் உலக சுகாதார அமைப்புக்கான 400 மில்லியன் டாலர் நிதியை நிறுத்திய வைத்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கொரோனவை எதிர்த்து போராட்ட 1 பில்லியன் அமெரிக்க   டாலர்  தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள நிலையில் டிரம்ப்  தற்காலிகமாக 400 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்திருப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
உலக நாடுகளை அனைவரும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டிய தருணம் இது  என ஐ. நா  பொதுச்செயலாளர் அன்டோனியோ கூறினார்.மேலும் கொரோனா யுத்தத்தில்   வெற்றி பெற உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவு தரவேண்டிய நேரம் என தெரிவித்தார்.


இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்டும் அமெரிக்காவின் செயலை கண்டித்துள்ளார். கொரோனாவால் உலக அளவில் சுகாதார அவசர நிலை நிலவும் இந்த சூழலில் உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுவத்துவ மிகவும் ஆபத்தானது.
அமெரிக்காவின் இந்த செயலுக்கு உலக நாடுகளை பாதிக்கும் என சீனாவும் கூறியுள்ளது.

author avatar
murugan