தொழிலாளர்களுக்கு வங்கியில் பணம் செலுத்துவது மத்திய அரசின் பொறுப்பு – ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி!

தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்துவது மத்திய அரசின் பொறுப்பு எனவும், இது காலத்தின் தேவை எனவும் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி அவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதிலும் தற்போது அதிகரித்து வரும் நிலையில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவி வழங்க வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி அவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் புலம்பெயர தொடங்கி இருப்பதால் அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்துவது மத்திய அரசின் பொறுப்பு என கூறியுள்ளார்.

மேலும், பொதுமக்கள் கொரோனா வைரஸை பரப்புகிறார்கள் என குற்றம் சாட்ட கூடிய மத்திய அரசு பொது மக்களுக்கு உதவி செய்யக்கூடிய நடவடிக்கை எடுக்குமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிரியங்கா காந்தி அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், சாலையோர வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும் எனவும், அதனை தயவுசெய்து செய்யுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal