அதிருப்தியில் ஓபிஎஸ் அணி.? ஈரோடு கிழக்கு தொகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கூண்டோடு ராஜினாமா.!

ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் உட்பட 106 நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது . 

அதிமுக அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்தது எனவும், அது எடப்பாடி பழனிசாமி அணி , ஓ.பன்னீர்செல்வம் அணி என பிரிந்து இருக்கிறது என்று கூறி வந்தாலும், தற்போதைய தேர்தல் நிலவரப்படி அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி அணியினர் தான் ஏகோபித்த வரவேற்பை பெறுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் நம்பிக்கையினை இழந்து வருகிறார்கள் என்றே கூற வேண்டும்.

ஓபிஎஸ் அணி :  அண்மையில் கூட  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசு தான் அங்கு அதிமுக சார்பில் இரட்டை இலையில் களம் காணுகிறார். ஓபிஎஸ் அறிவித்த செந்தில் முருகன் தேர்தலில் இருந்து பின்வாங்கி விட்டார்.

ராஜினாமா :  தற்போது இந்த உள்கட்சி பிரச்சனை எல்லாம் பூதாகரமாக வெடித்து, ஓபிஎஸ் அணியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 106 நிர்வாகிகள் தங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். முருகானந்ததை தான் கட்சி நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் வேட்பாளராக அறிவிக்க நினைத்தார்களாம். செந்தில் முருகனை இபிஎஸ் அறிவித்ததில் நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment