காஸாவை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு..!

காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மாறிமாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் தாக்குதலில், 1700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில், பிற நாடுகளின் ராணுவ உதவிகள் எங்களுக்கு தேவையில்லை என்றும், இந்த போரை நாங்களே பார்த்துக்கொள்வோம் என்றும் இஸ்ரேல் தூதர் அறிவித்துள்ளார்.

அங்கு நொடிக்கு நொடி பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், போர் காரணமாக காசா பகுதியிலிருந்து 1.2 லட்சம் மக்கள் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், காசாவிற்கு எரிபொருள், உணவு எடுத்துச் செல்ல அனுமதியில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று காசா எல்லை முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்து இருந்த நிலையில், தஹ்ரபோது காஸாவை சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. வான்வழி மற்றும் பீரங்கிகள் மூலம் ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.