அடடே இப்படி ஒரு ரசமா…? மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடக்கத்தான்….!!!

வளர்ந்து வரும் நாகரீகமான வாழ்க்கை முறை, பல நோய்களையும் வளர்த்து எடுக்கிறது. இந்த நோய்கள் பெரியவர்களை மட்டுமல்லாது, சிறியவர்களை கூட தாக்குகிறது. இன்று முதியோருக்கு வரும் நோய்களில் மிக முக்கியமான ஒன்று இந்த மூட்டுவலி தான்.

Image result for மூட்டு வலி

மூட்டு வலி வந்தால், நம்மால் நம்முடைய வேலைகளை கூட செய்வது கடினமாகி விடுகிறது. ஆனால் எல்லா நோய்களுக்கும் தீர்வாக இறைவன் நமக்கு இயற்கையை பரிசாக அளித்துள்ளார். என்றைக்கு நாம் இயற்கையான மருந்துகளை விட்டு விட்டு செயற்கையான மருந்துகளை பின்பற்ற தொடங்கினோமோ, அது தான் நமக்கு பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றும் போது, மூட்டுவலி குணமாக்குவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும், ஒரு நோய் குணமானால் பல நோய்கள் வருவதற்கான வாசல்களை திறந்து விடுகிறது செயற்கை மருத்துவ முறைகள்.

முடக்கத்தான் :

மூட்டு வலியில் இருந்து பூரண சுகமளிக்க கூடியது முடக்கத்தான் கீரை. இந்த கீரையை நமது உணவில் அதிகமாக சேர்த்து வரும் போது மூட்டுவலியில் இருந்து விடுதலை அடையலாம். இந்த கீரை ஒரு சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.

Image result for முடக்கத்தான்

 

இப்போது இந்த கீரையை வைத்து சுவையான முடக்கத்தான் ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

  • முடக்கத்தான் கீரை – 2 கைப்பிடியளவு
  • புளி – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • பூண்டு 10 பல் காய்ந்த மிளகாய் 5
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • மிளகு & சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
  • நெய் – 50 கிராம்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் புளியை ஊற வைத்து, கரைத்து அதன் கரைசலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பூண்டு மற்றும் மிளகாய் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு கீரையை கழுவி தண்ணீர் சேர்த்து  கொதிக்க விட வேண்டும். ஆறிய பின் வடிகட்டிய தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Image result for முடக்கத்தான்

அதன்பின் வடிகட்டிய தண்ணீருடன் புளி கரைசல், சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு அரைத்த பூண்டு – மிளகாய் விழுது, மிளகு, சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் கலந்து இறக்கினால், சத்தான, சுவையான முடக்கத்தான் ரசம் தயார்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment