காய்கறிகளை ஜூஸ் போட்டு குடித்தால் இவ்வளவு ஆபத்தா? கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க!

நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத  ஒன்று  காய்கறிகள் தான். அதில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதை அப்படியே ஜூஸ் ஆக எடுத்துக் கொண்டால் பல பக்க விளைவுகளும் ஏற்படுத்தும் ஆகவே எந்த காய்கறியை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் வாசிப்போம்.

காய்கறிகளில் நாட்டு காய்கறி மண்ணிற்கு கீழ் வளரும் காய்கறி கொடி வகையான காய்கறி என உள்ளது. இவற்றை நாம் காலம் காலமாக சமைத்து அல்லது அவித்து, பொரியல் செய்து பயன்படுத்துகிறோம். ஆனால் தற்போது இது மாறி அனைத்து காய்கறிகளையும் ஜூஸாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் உருவாகி உள்ளது. பச்சை காய்கறிகளை ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது நோய் குணமாகும் என்று எந்த ஆய்விலும் கூறப்படவில்லை. வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் பற்றாக்குறையை சரி செய்கிறது என்றே கூறலாம். ஒரு சில குறிப்பிட்ட காய்கறிகளை மட்டுமே நாம் ஜூஸாக எடுத்துக் கொள்ள வேண்டும், அதிலும் பக்கவிளைவுகள் உள்ளது.

கேரட்டில் விட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்ட் அதிகம் உள்ளதால் கண் நோய் வராமல் பாதுகாக்கும்.

பீட்ரூட் ஜூஸ் நாம் எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். மேலும் தோலில் ஏற்படும் சத்து குறை பாட்டை சரி செய்யும்.

வெண்பூசணியை நாம் ஜூஸாக எடுத்துக் கொண்டால் உடல் எடை குறைக்க பயன்படுத்தலாம். வெள்ளைப்படுதல் போன்றவைகளும் சரியாகும். உடல் சூடு குறையும்.

முட்டைக்கோசை ஜூஸ் ஆக எடுத்துக் கொண்டால் குடல் புண்ணை சரி செய்யும்.

சுரக்காய் இது நம் நாட்டு காயாகும். உடலில் இருக்கும் அதிக நீரை வெளியேற்றும். கால் கை வீக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். இந்த காய்கறிகளை மட்டும் நான் ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும் இதழும் பக்க விளைவுகள் உள்ளது.

இதை தவிர்த்து பீர்க்கங்காய் ஜூஸ், கொத்தவரங்காய் ஜூஸ் ,பூசணிக்காய் ஜூஸ் போன்றவற்றை பச்சையாக எடுத்துக் கொள்வது முற்றிலும் தவறு.

பக்க விளைவுகள் :

காய்கறிகளை நாமே விளைவிப்பதில்லை. வெவ்வேறு பகுதிகளில் இருந்து விளைந்து கை மாறி சந்தைக்கு வருகிறது. அதுவும் தற்போது உள்ள காலகட்டத்தில் பல செயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கின்றனர். பார்ப்பதற்கு பிரஷ்ஷாக இருந்தாலும் அதில் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள், யூரியா போன்றவைகளை தவிர்க்க முடியாத ஒன்று. எனவே இவற்றை நாம் அப்படியே பச்சையாக எடுத்துக்கொள்ளும் போது அதன் தாக்கம் நமக்கும் ஏற்படும்.

ஆக்சலேட் பச்சை காய்கறிகளில் அதிகமாக இருக்கும். இது நம் உடலில் உணவை உறிஞ்சுதலை தடுக்க கூடிய ஒன்று. இது கால்சியத்தை கல்லாக மாற்றி சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். நாம் சமைத்து சாப்பிடும் போது இந்த ஆக்சிலேட் குறைக்கப்படுகிறது.

குறிப்பிட்ட ஒரே காய்கறிகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் அதன் சத்துக்கள் மட்டுமே நமக்கு கிடைக்கும். சரிவிகித சத்துக்கள் கிடைப்பதில்லை.
மேலும் ஜீரண கோளாறு வயிற்று போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும்.

மண்ணுக்கு கீழ் விளையும் கேரட் பீட்ரூட் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது குடல் பூச்சிகளை அதிகரிக்கும். மண்ணுக்குள் இருக்கும் பூச்சிகள் காய்கறிக்குள்ளேயும் போய்விடும். அதை நாம் பச்சையாக எடுத்துக் கொள்ளும் போது குடலில் பூச்சியை உருவாக்கும். இதை நாம் சமைத்து சாப்பிடும் போது அந்த பூச்சிகள் அளிக்கப்படும். எனவே வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் இந்த ஜூஸ் வகைகளை மாற்றி மாற்றி சுழற்சி முறைகளில் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 200 எம்எல் போதுமானதாகும்.

ஆகவே நாம் காலம் காலமாக சமைத்து சாப்பிடும் முறையை பயன்படுத்துவோம். சமைத்தால் சத்துக்கள் போய்விடும் என நினைப்பவர்கள், எடுத்துக்கொள்ளும் காயின் அளவை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம் அப்போது அதன் சத்துக்கள் முழுதாக கிடைத்து விடும்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.