சிபிஐ விசாரணைக்கு முன் தடையங்களை அளிக்க வாய்ப்பு ! உயர்நீதிமன்ற மதுரை கிளை

நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா?  என்று  பதில் அளிக்க  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி   தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார்.அதன்படி நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.அப்பொழுது நீதிமன்றம் இது அரசின் கொள்கை முடிவு ,நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தது.

இந்நிலையில் சாத்தான்குளம் தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்பொழுது சிபிஐ விசாரணைக்கு முன் தடையங்களை அளிக்க வாய்ப்பு உள்ளது .எனவே  சிபிஐ விசாரணை தொடங்கும்வரை நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி விசாரிக்க இயலுமா? என்று  மதியம் 12 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.