பிஜேபியில் பதவியை பெறுவதற்கு அடிப்படை தகுதியே பெண்களை இழிவுபடுத்துவதுதானா? – எம்.பி.ஜோதிமணி

பிஜேபியில் பதவியை பெறுவதற்கு அடிப்படை தகுதியே பெண்களை இழிவுபடுத்துவதுதானா? – எம்.பி.ஜோதிமணி

மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில், சண்முக சுப்பையா இடம்பெற்றதற்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பெண்களிடம் ஆபாசமாக நடத்து கொண்ட பாஜகவின் அகில பாரதிய வித்யா பரிசத் தேசிய தலைவர் சண்முக சுப்பையாவுக்கு பதவி வழங்கப்பட்டதற்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த  பதிவில்,’ஒரு பெண் வீட்டின் முன் சிறுநீர் கழித்து, அவரிடம் ஆபாசமாக அறுவெறுப்பாக நடந்துகொண்ட, பிஜேபியின் சண்முக சுப்பையாவை, மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவகல்லூரி உறுப்பினராக நியமித்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. பெண்களை, மருத்துவத்துறை இதை விடவும் யாரும் இழிவு படுத்திவிடமுடியாது. பிஜேபியில் பதவிகளைப் பெறுவதற்கு அடிப்படைத்தகுதியே பெண்களிடம் இழிவாக நடந்துகொள்வதுதானா?’ என கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.