தாவூத் இப்ராஹிம் கொரோனாவால் இறந்துவிட்டாரா ?

இந்தியாவில் 1993 இல் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் என பல்வேறு குண்டுவெடிப்பு

By Castro Murugan | Published: Jun 06, 2020 10:04 PM

இந்தியாவில் 1993 இல் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் என பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய  நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் தேடுப்படும் குற்றவாளியாக உள்ளார். இந்நிலையில் இவர் பாகிஸ்த்தானில் உள்ள கராச்சியில் கொரோனாவால் இறந்துவிட்டார் என்று தற்பொழுது ஒரு செய்தி வெளியாகியுள்ளது  .

இவர் பாகிஸ்த்தானில் இருப்பதாக இந்திய உளவுத்துறை பலமுறை அதற்கான ஆதாரங்கள் கொடுத்ததும் பாகிஸ்த்தான் அதை மறுத்து தாவூத் இல்லை என்று கூறிவருகிறது. இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்த்தானில் உள்ள கராச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இராணுவ மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டதாகவும்  .அவர் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியாகியுள்ளது  .

ஆனால் இந்த தகவல் உண்மையல்ல என்று தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராகிம் கூறியிருக்கிறார். தாவூத் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்றும் வீட்டில்  இருப்பதாகவும் அனீஸ் தொலைபேசி மூலம் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாக மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

Step2: Place in ads Display sections

unicc