ஐபிஎல் மெகா ஏலம்…! எப்போது தெரியுமா..?

பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெங்களூரில் வைத்து இந்த ஏலம் நடைபெற உள்ளது என்று  தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர், பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெங்களூரில் வைத்து இந்த ஏலம் நடைபெற உள்ளது என்று  தெரிவித்துள்ளார். இந்த ஏலம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

இதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பரவலானது அதிகரிக்காமல் இருந்தால், இந்தியாவில் வைத்து நடைபெறும் என்றும், அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஏலம் நடைபெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளது. இந்த மெகா ஏலத்தில், 1,000 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.