பிரதமர் மோடியுடன் பேசியது என்ன ? முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைக்க அழைப்பு விடுத்தேன் என்றும் அதனை பிரதமர் மோடி ஏற்றார் என்றும்  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி.டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக சந்திப்பு நடைபெற்றது.பிரதமருடனான சந்திப்பு முடிந்த பின் , டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன்.தமிழ்நாட்டில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க வருவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன்.கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.தமிழகத்தை தாக்கிய புயலுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் நிவாரணம் கோரப்பட்டுள்ளது.தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது.பிரதமர் மோடி ,உள்துறை அமைச்சருடன் எந்தவித அரசியலும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.