தூத்துக்குடி வஉசி துறைமுக வரலாறு ; விரைவில் ட்ரஸ்டியாக INTUC கதிர்வேல், CITU ரசல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்…!

தூத்துக்குடி ஜூலை 21 ;
வ. உ. சிதம்பரனார் துறைமுகம் (V.O.Chidambaram Port Trust) முன்னதாக தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். 2011 ஆம் வருடம் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள இந்தக் கடலோரச் செயற்கைத் துறைமுகம்  1974ஆம் ஆண்டு ஜூலை  11 இல் முதன்மைத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரும் துறைமுகமாகவும் கொள்கலன் முனையங்களில் கொச்சி, சவகர்லால் நேரு துறைமுகம், மும்பை மற்றும் சென்னைத் துறைமுகங்களுக்கு அடுத்ததாக இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் துறைமுகமாகவும் விளங்குகிறது. 2008ஆம் ஆண்டில் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 13 வரை 10 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக சரக்குகளை மேலாண்டுள்ளது. இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி/இறக்குமதி நடைபெறுகிறது.
கி.பி. 7 – 9 மற்றும் கி.பி. 10 – 12 காலகட்டங்களில் பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் பயன்பாட்டில் இயற்கைத் துறைமுகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது
.
தூத்துக்குடி பல நூற்றாண்டுகளாகவே முத்து வளர்ப்பிற்கும் கடல்சார் வணிகத்திற்கும் பெயர்பெற்றிருந்தது. மிகுந்த வளமிக்க பின்னிலத்தையும் இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டிருந்த இங்கு துவக்கத்தில் மர தூண் துறைகளும் பின்னர் திருகாணி தூண் துறைகளும் கட்டப்பட்டன. தொடருந்து இணைப்பு ஏற்பட்டபின்னர் துறைமுக மேம்பாட்டுப் பணிகள் முனைப்பாகத் தொடங்கின. 1868ஆம் ஆண்டில் தூத்துக்குடி ஓர் நங்கூரம் பாய்ச்சி கப்பல்கள் நடுக்கடலில் இருக்க படகுகள் மூலம் நிலத்துடன் தொடர்பு கொண்ட நங்கூரத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதலே பல மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இங்கு பெருகி வரும் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு அனைத்து வானிலைகளிலும் இயங்கக்கூடியத் துறைமுகம் அமைக்கத் திட்டமிட்டது. புதியதாகக் கட்டப்பட்ட தூத்துக்குடித் துறைமுகம் 1974ஆம் ஆண்டு சூலை 11 அன்று இந்தியாவின் பத்தாவது முதன்மைத் துறைமுகமாக திறக்கப்பட்டது. 1979ஆம் ஆண்டில் அதுவரை இயங்கிய தூத்துக்குடி சிறு துறைமுகமும் புதியதாகக் கட்டப்பட்ட பெரிய துறைமுகமும் இணைக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்தின் நிர்வாகத்தில் வந்தன.

வஉசி துறைமுக வளாகத்தில் தொழிலார்கள் நலன் கருதி தேர்தல் ;          வஉசி துறைமுக வளாகத்தில் தொழிலார்கள் நலன் கருதி தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கம் இந்த தேர்தல் மூலம் இரண்டு பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது வழக்கம், அதன் படி தேர்தல் நடத்த தொழிலாளர்கள்   ஓட்டுப்போட  6 பூத்துக்கள்  அமைக்கப்பட்டு அதற்க்கு   தலைமை தொழிலாளர் நல துணை ஆணையர் ஸ்ரீனிவாஷ், மண்டல  தொழிலாளர் நல ஆணையர் ராஜேந்திரன், முன்னாள் தொழிலாளர் நல ஆணையர் ஜோப் ஃப்ரின் ஆகியோர் தலைமையில் தேர்தல்  நடந்தது.   இந்த தேர்தலில்  6 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன,இதில் உள்ள  உறுப்பினர்கள்  823பேர் தங்களது வாக்குகளை செலுத்தினர்..                                                                  
இதில் காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி 255 வாக்குகளும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் சி.ஐ.டி.யூ 216 வாக்குகளும்,ஹெச்.எம்.எஸ் 122 வாக்குகளும்,ஹெச்.எம்.எஸ்.டபிள்யூ 79 வாக்குகளும்,எஸ்.சி/எஸ்.டி 70வாக்குகளும்,அதிமுக 64 வாக்குகளையும் வாங்கின .                                      

 ஐ.என்.டி.யு.சி.தொழிலாளர் அமைப்பை சார்ந்த  கதிர்வேல் தேர்தலில் முதல் இடத்தை பிடித்தார். , சி.ஐ.டி.யு. அமைப்பை சார்ந்த ரசல் 2 வது இடத்தை பிடித்தார்.,  ஹெச்.எம்.எஸ். சத்யா 3 வது இடத்தை பிடித்தார்.,
ஹெச்.எம்.எஸ்.டபிள்யூ. கிளிண்டன் 4 வது இடத்தை பிடித்தார்.,     எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்த பிட்டு 5 வது இடத்தை பிடித்தார்.,          
அதிமுகவைச் சேர்ந்த சண்முககுமாரி 6 வது   இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.  இதன் மூலமாக வஉசி துறைமுகத்தின் உறுப்பினராக  2 பேர் நியமிக்கப்படுவார்கள்.

                                                ஐ.என்.டி.யு.சி சார்பில் கதிர்வேல்

                                                      சி.ஐ.டி.யு.சார்பில் ரசல்

ஆகியோர் தூத்துக்குடி VOC துறைமுக டிரஸ்ட்யாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.                    

author avatar
Castro Murugan

Leave a Comment