பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இடஒதுக்கீடு.!

பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வினியோகம் இன்று தொடங்கியது. அதன்படி, https://tneaonline.org என்ற இணையதளத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துள்ளீர்களா? என்று விவரம் கோரி உள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரை அடிப்படையில் 7.5% முதல் 10% வரை இட ஒதுக்கீடு அமலாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், செப்.4ம் தேதி இடஒதுக்கீடு அடிப்படையில் பி.இ தரவரிசை பட்டியல் வெளியாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

B.E / B.TECH படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல் நாளில் 25,611 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த 25,611 பேரில் 10,084 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர் என்றும் மாணவர் சேர்க்கை குழு செயலர் கூறியுள்ளார். மேலும், 25,611 பேரில் 5,363 பேர் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்