காஞ்சிபுரம் இட்லி பற்றி நீங்கள் அறியா தகவல்கள்..! செய்வது எப்படி?

இட்லிகளில் என்ன தான் பல வகைகள் இருந்தாலும் இந்த காஞ்சிபுர இட்லி தனித்துவம் வாய்ந்தது. ஒருவர் தன் வாழ்நாளில் கட்டாயம் சுவைத்துப் பார்க்க வேண்டிய உணவுகளுள் இதுவும் ஒன்று.

இன்றைய பதிப்பில் காஞ்சிபுரம் இட்லி குறித்த பல சுவாரசிய தகவல்களையும், அதனை எப்படி செய்வது என்ற செய்முறையை பற்றியும் பார்க்கலாம் வாருங்கள்..

சுவாரசிய தகவல்கள்..

காஞ்சிபுர இட்லிகள் என்பவை சாதாரண இட்லிகளை போல் இல்லாமல், இட்லி மாவினில் மிளகு, சீரகம், இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. மேலும் இந்த இட்லிகளை சாதாரண முறையினில் அல்லது தாமரை இலையில் அதாவது தொன்னை எனப்படும் இலை கொண்டு தயாரிக்கலம்; பலர் இவ்விட்லியை வட்ட வடிவிலும், டம்ளர் வடிவிலும் தயாரிப்பதுண்டு.

காஞ்சிபுர இட்லிகளை போன்றே கர்நாடக மாநிலத்தில் கோட்டா எனும் இட்லி வகை பலாப்பழ இலைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறதாம்.

நேர அவகாசங்கள்..

இந்த இட்லி மாவை தயாரிக்க, பொருட்களை ஊற வைப்பதில் இருந்து, அரைத்து முடிப்பது வரை 12 மணி நேரங்கள் தேவைப்படலாம். இட்லியை சமைக்க 20 நிமிடங்கள் தேவை மற்றும் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அளவு விகிதப்ப்படி, இந்த இட்லிகளை 6-8 பேர் உண்ணலாம்.

தேவையான பொருட்கள்!

1 கப் அரிசி, 1 கப் இட்லி அரிசி, உளுந்து 1 கப், உப்பு தேவையான அளவு, நொறுக்கிய மிளகு – 2 தேக்கரண்டி, சீரகம் – 1 தேக்கரண்டி, வறண்ட இஞ்சி பொடி – 1 தேக்கரண்டி, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) – 1 தேக்கரண்டி, உளுந்து(அல்லது சுண்டல்) – 2 தேக்கரண்டி, நறுக்கிய கறிவேப்பிலை – சில, கடுகு – 1 தேக்கரண்டி, நொறுக்கிய முந்திரி பருப்பு – 10, பெருங்காயம் – ¼ தேக்கரண்டி

செய்முறை

அரிசி மற்றும் உளுந்தை நன்றாக கழுவிய பின்னர், தனித்தனி பாத்திரத்தில் குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வைத்தல் வேண்டும்.

ஊறிய அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக அரைத்து, பின் அவற்றை ஒன்றாக சேர்த்து, மாவு சற்று புளிக்க குறைந்தது 6 – 10 மணி நேர கால அவகாசம் அளிக்கவும்.

புளித்த மாவில் சீரகம், மிளகு, இஞ்சி போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்; இட்லிக்கு கூடுதல் சுவை வழங்க கடுகு, கறிவேப்பிலை, முந்திரி, பெருங்காயம், உளுந்தம் பருப்பு போன்றவை சேர்த்து நன்கு கலக்கவும்.

இவ்வாறு தயரித்த மாவை இட்லிகளாக டம்ளர் அல்லது சாதாரண முறையில் வார்த்து, 15-20 நிமிடங்கள் வேக வைக்கவும்; இட்லி வெந்த பின் 5 நிமிடங்கள் பொறுத்து அவற்றை இட்லி தட்டில் இருந்து எடுத்து பரிமாறவும்.

இம்முறையில் தயாரித்த, இக்காஞ்சிபுர இட்லியை பிட்டு தேங்காய் சட்னி, சாம்பார், பொடி மற்றும் பிற சட்னி வகைகளுடன் பரிமாறுவர்.

author avatar
Soundarya

Leave a Comment