மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து 31ஆம் தேதி வரை ரத்து .! மத்திய அரசு .!

நாடு முழுவதும் இன்று மக்களுடைய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த நேரத்தில் மத்திய அரசு இன்று உயர்மட்ட அதிகாரிகள் குழு மூலமாக ஆலோசனை நடத்தி அனைத்து மாநிலங்களுக்கும் தற்போது முக்கிய தகவல் ஒன்றை அனுப்பி உள்ளது.

அதில் ஒரு மாநிலத்தில் இருந்து பேருந்துகள் அடுத்த மாநிலத்தை செல்ல வேண்டாம்.எனவே 31-ம் தேதி வரை ஒரு மாநிலத்திலிருந்தும் இன்னொரு மாநிலத்துக்கு பேருந்து செல்ல வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது கொரோனா  தடுப்பதற்காக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து   ரத்து  செய்யப்பட்டுள்ளது.

 மேலும் நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் உள்ள  மெட்ரோ சேவைகளை ரத்து செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே சென்னை , டெல்லி ,கொல்கத்தா போன்ற அனைத்து மெட்ரோ ரயில் சேவைகளும் தடை செய்யப்படுகின்றன.

author avatar
murugan