வெளிநாடு அருங்காட்சியகத்தில் உள்ள தமிழக பொருட்களை மீட்க நடவடிக்கை.! தங்கம் தென்னரசு உறுதி.!

கல்வெட்டு பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை தேவைப்படுகிறதோ அதனை செய்ய தமிழக அரசு மற்றும் தொல்லியல் துறை செய்ய தயாராக இருக்கிறது. – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல். 

உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழகத்தில் இருந்து மைசூருக்கு கொண்டசெல்லப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இது குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு சேத்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக கல்வெட்டுகளை மீட்க தொடர்ச்சியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆதிச்சநல்லூரில்  இருந்து தமிழக பொருட்கள் 1870ஆம் ஆண்டு அப்போது ஆங்கிலேயர்கள் அனுமதியுடன் ஜெர்மன் எடுத்து செல்லப்பட்டு, பெர்லின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அதே போல, 1903 ஆய்வின் எடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள்  மீட்கப்பட்டு சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன. வெளிநாட்டில் இருக்கும் தமிழக பழங்கால பொருட்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். மைசூரில் இருந்து கொண்டுவரப்பட்ட கல்வெட்டுகள் உயர்நீதிமன்ற தீர்ப்புபடி சென்னையில் வைத்துள்ளார்கள்.

கல்வெட்டு பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை தேவைப்படுகிறதோ அதனை செய்ய தமிழக அரசு மற்றும் தொல்லியல் துறை செய்ய தயாராக இருக்கிறது.  முதற்கட்டமாக 13000 கல்வெட்டுகள் வந்துள்ளது தகவல் வந்துள்ளது. மொத்தம் 26,000 கல்வெட்டுகளில் பாதியளவு வந்துள்ளது. என அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment