#INDvsNZ ODI: முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து இடையே ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்கியுள்ளது. இரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக  நியூசிலாந்து அணி பந்துவீச உள்ளது. விளையாட தேர்வு செய்யப்பட்ட இரு அணிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (w), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், ஸ்ரீகர் பாரத், ஷாபாஸ் அஹ்மத் , ரஜத் படிதார்

நியூசிலாந்து (பிளேயிங் லெவன்): ஃபின் ஆலன், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் மற்றும் W), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர்

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment