மின்சார வாகன உற்பத்திக்கு என தொழிற் பூங்கா ! 50 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடு கிடைக்கும் என எதிர்பார்ப்பு

தமிழக அரசு மின்சார வாகன உற்பத்திக்கு என்று தனி தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது.

மின்சார வாகன உற்பத்திக்கு என்று தனி தொழிற்பூங்கா அமைப்பதன் மூலமாக   50 ,000 கோடி அளவிற்கு முதலீடு கிடைக்கும் என்று தமிழக அரசு எதிர்பார்த்துள்ளது.எனவே முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தமிழக அரசும் பல ஊக்கமளிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. இது குறித்து  ஆட்டோ சிஎக்ஸ்ஓ ரவுண்டேபிள்  ( Auto CXO Roundtable ) தலைமை செயல் அதிகாரி நீரஜ் மிட்டல் கூறுகையில்,இதற்காக தனி தொழிற்பூங்கா அமைப்பதன் மூலம் புதிதாக 1,50,000 வேலைகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த பூங்கா 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்றும் இங்கு முதலீடு செய்பவர்களுக்கு 100 % ஜிஎஸ்தி திருப்பி அளிக்கப்படும் என்றும் முதலீட்டில் 50 % மானியமாகவும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  தமிழக ஆட்டோ துரையின் முக்கிய மையமாக சிறந்த சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.