மாடர்னா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளித்த இந்தோனேஷியா!

மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு இந்தோனேசியா அரசு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக பரவி வரும் நிலையில், தற்பொழுது கொரோனாவை  எதிர்க்கும் ஆயுதமாக உலகம் முழுதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்தோனேசியாவிலும் தற்பொழுது கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மார்ச் மாதம் முதலே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்தோனேசியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை இந்தோனேசிய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலமாக இந்த மாடர்னா தடுப்பூசி இந்தோனேசியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு  தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முதல் கட்டமாக 40 லட்சம் தடுப்பூசிகளை இந்தோனேசிய அரசு கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் பெறவுள்ள நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal