மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது- உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு. 

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது என திமுக போட்டி வேட்பாளர் வனிதா தாக்கல் செய்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைமுக தேர்தலை நடத்தினால் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தோல்வி அடைந்துவிடும் என நீதிபதி தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த வனிதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பேரூராட்சி தலைவர் வேட்பாளராக ராகினியை கட்சியால் அறிவிக்கப்பட்டார். அதனால், நான் போட்டி வேட்பாளராக போட்டியிட்டேன். மார்ச் 4-ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் ராகினி 7 வாக்குகள் பெற்றதால், நான் 8 வாக்குகள் பெற்றதால் பேரூராட்சி தலைவராக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பின்னர், ராகினியின் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைவர் தேர்வில் தவறுகள் இருப்பதாக கூறி எனக்கு வழங்கப்பட்ட சான்றிதழை தேர்தல் அலுவலர் திரும்ப பெற்றார்.மேலும், மீண்டும் தேர்தல் நடத்தபட்டு வாக்குகள் எண்ணப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில், நான் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழை வழங்க தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan