உக்ரைனில் இந்தியர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – இந்திய தூதரகம்

உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் சண்டை தீவிரமாக நடப்பதால், இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தல். 

உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சுற்றிவளைத்து ரஷ்யா படைகள் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாகவும் ரஷ்ய ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் சண்டை தீவிரமாக நடப்பதால், இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், இந்த சூழலில் வெளியே செல்வது பாதுகாப்பானது அல்ல என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், இந்தியர்கள் ரயில் நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென்றும், ஊரடங்கு ரத்து, பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் நேரத்தில் ரயில் நிலையங்களுக்கு செல்லலாம் என்று இந்தியர்களுக்கு, இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.