காவிமயமான இந்திய அணி ! ஜெர்சியில் அதிரடி மாற்றம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த உலக கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது.நாளை மறுநாள் முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.

தற்போது உள்ள அணிகளில் ஆப்கானிஸ்தான்,இந்தியா,இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு ஜெர்சி நீல நிறம் ஆகும்.அதேபோல் வங்கதேசம்,பாகிஸ்தான்,தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பச்சை நிற ஜெர்சி ஆகும்.

ஆனால் தற்போது  ஐசிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,ஒரே நிறத்திலான ஜெர்சியை இரு அணிகளும் அணிந்து விளையாட அனுமதி மறுப்பு தெரிவித்துவிட்டது ஐசிசி.இதற்கு ஏற்றவாறு அணியில் தற்போது உள்ள ஜெர்சியின் நிறத்திற்கு மாற்றாக மற்றுமொரு ஜெர்சியை தயார் செய்யும்படி ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது.இதில் இரு அணிகள் நேருக்கு நேர் மோதும் சூழ்நிலை ஏற்படும் போது ஏதாவது ஒரு அணி தங்கள் அணியின் மாற்று ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும். இதற்காக இந்திய அணி மாற்று ஜெர்சியாக  ஆரஞ்சு நிறத்தை தேர்வு செய்துள்ளது.இந்திய அணியை பொருத்தவரை  2  போட்டிகளில் ஆரஞ்சு நிற ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. ஜூன் 22ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடனும், ஜூன் 30ம் தேதி இங்கிலாந்து அணியுடனும் மோதுகின்றது.இந்த போட்டிகளில் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சியுடன் விளையாடவுள்ளது.தற்போது இந்த ஆரஞ்சு நிற ஜெர்சி சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Comment