2 ஆண்டுகளுக்கு பின் சீனாவில் கல்வியை தொடர இந்திய மாணவர்களுக்கு அனுமதி…!

கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மாணவர்கள், சீனாவில் தங்கள் கல்வியைத் தொடர சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய மாணவர்கள் சீனாவில் தங்களது படிப்பை விட்டுவிட்டு,  இந்தியாவிற்கு வந்தனர். சீன பல்கலைக்கழகங்களில் சுமார் 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் பயின்று வந்த நிலையில் அவர்கள் மீண்டும் சீனாவுக்குச் சென்று  தங்களது படிப்பை தொடர இயலாத சூழலில் இருந்தனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மாணவர்கள், சீனாவில் தங்கள் கல்வியைத் தொடர சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னதாக, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.