வரலாற்றில் முதன் முறையாக 100% சரியான நேரத்தில் இயங்கிய இந்திய ரயில்கள்!

வரலாற்றிலேயே முதல் முறையாக 100% சரியான நேரத்தில் இந்திய ரயில்வே ஜூலை ஒன்றாம் தேதி இயங்கி உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையில் நேர தாமதம் என்பது வழக்கமாக நடப்பதுதான். ஆனால், இந்திய ரயில்வேயில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் முறையாக எவ்வித தாமதமும் இன்றி 100% சரியான நேரத்தில் இந்திய ரயில்வே இயங்கியுள்ளதாம். பயணிகள் எந்த ஒரு தாமதத்தையும் எதிர்கொள்ளவில்லை, அதுபோல புறப்படும் மற்றும் வந்தடையும் நேரம் சரியான நேரத்தில் அமைந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மொத்த ரயில்களும் இயங்காமல் ஒரு பகுதி ரயில்கள் மட்டுமே இயங்கக் கூடிய இந்த சூழ்நிலையில், இந்த மாதம் ஒன்றாம் தேதி 100 சதவீத சரியான நேரத்தை இந்திய ரயில் அடைந்துள்ளது. இதுவே வரலாற்றில் முதல் முறையாகும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அந்த டுவிட்,

author avatar
Rebekal