ஒரு முறை என்ன "என் அணிக்காக ஆறு முறை" கூட இத செய்ய நா ரெடி…..அதிரடி நாயகன் விராட்…!!

இந்தியா  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 321 ரன்களை குவித்தது. ரன் குவிப்பில் ஈடுபட்ட இந்திய அணி கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
Related imageசதமடித்த நிலையில் தொடர்ந்து அவுட் ஆகாமல் 157 ரன்கள் சேர்த்தார்.இந்த ரன் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் போதே 150 ரன்னைத் தொட்ட விராட் கோலி கடுமையாக சேர்ந்து போய் விளையாடிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கோலியை ரன் அவுட் ஆக்க நினைத்த போது ரன்அவுட் ஆகாமல் இருக்க டைவ் அடைத்து க்ரீஸை வந்தடைந்த கடைசி வரை அவுட் ஆகாமல் விளையாடினார்.சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டி உலகில் அதிவேக மற்றும் அதிரடியாக  10 ஆயிரம் ரன்களை கடந்த விராட் கோலி புதிய உலக சாதனையை கிரிக்கெட்டில் படைத்தார்.
Related image
அதிரடி மன்னன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது  81 ரன்கள் கடந்த போது இந்த சாதனையை நிகழ்த்தினார். இதனை தனது 205 வது இன்னிங்சிலே விராட் கோலி எட்டியது தான் ஆச்சரியத்திலும் அதியம்.கிரிக்கெட் கடவுள்,ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.சச்சின் 259 இன்னிங்சில்  10 ஆயிரம் ரன்களை கடந்ததே கிரிக்கெட் உலகில் சாதனையாக இருந்த நிலையில் ஆக்ரோச மற்றும் அதிரடிக்கு சொந்தக்காரரான விராட் கோலி 205 இன்னிங்கிலே இந்த சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Related image
இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இந்த ஒருநாள் போட்டி முடித்த விராட் கோலி தனது நிகழ்த்திய சாதனை மற்றும் இந்திய அணிக்காக விளையாடுவது குறித்த விரிவான பேட்டி ஒன்றை அளித்தார். விராட் கோலி கூறுகையில் எனது நாட்டிற்காக விளையாடுவதை நான் மிகப்பெரிய பெருமையாக நினைக்கிறேன். 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய போதிலும், பெரிய அளவில் சாதித்ததாக நான் நினைக்கவில்லை. நம் நாட்டிற்காக சர்வதேச போட்டியில் விளையாடும்போது ஒவ்வொரு ரன்கள் எடுக்க கடினமாக உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்.சோர்ந்த நிலையில் டைவ் பற்றிய கேள்விக்கு ஒரே ஓவரில் 6 முறை டைவ் அடிக்க வேண்டும் என்றாலும் கூட இந்திய அணிக்காக நான் அதை செய்வேன்.
Related image
இது என்னுடைய வேலை. நான் இந்திய அணியில் இதற்காக தான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இது என்னுடைய வேலையோட ஒரு பகுதியாக தான் பார்க்கிறேன் என்று அதிரடி வீரர் அமைதியாக கூறினார்.விராட்டின் தெரிக்கவிடும் பேட்டிங்கை பாராட்டதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment