இந்தியா -இலங்கை ஒருநாள் போட்டி மழையால் நிறுத்தம்- பிசிசிஐ அறிவிப்பு ..!

இந்தியா -இலங்கை இடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் 3 மணியளவில் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே தவான் 13 ரன்களில் வெளியேற பின்னர் சஞ்சு சம்சன் களமிறங்கினார். சஞ்சு சாம்சன், பிருத்வி ஷா இருவரும் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடி வந்த பிருத்வி ஷா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் தாசுன் ஷானகா ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார்.

இதையடுத்து மனிஷ் பாண்டே களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 46 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 23 ஓவரில் 3 விக்கெட் 147 ரன்கள் எடுத்தனர். அப்போது போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது இதை பிசிசிஐ தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

தற்போது களத்தில் மனிஷ் பாண்டே 10, சூர்யகுமார் யாதவ் 22 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். முதல் 2 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan