இந்தியா பல்வேறு மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம்.! லண்டன் பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி பேச்சு.!

இந்தியா பல்வேறு மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம் ஆகும். – கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல்காந்தி பேச்சு.

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தற்போது 10 நாள் பயணமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளார். அதில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக புகழ்பெற்ற லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களின் ஒன்றியம் : கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் கேரள வயநாடு எம்பியுமான ராகுல்காந்தி பேசுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றி  பேசினார். அவர் கூறுகையில், இந்தியா பல்வேறு மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம் ஆகும். இந்தியா ஐரோப்பா போன்று பல்வேறு மாகாணங்களை கொண்டது என ஒப்பிட்டார்.

பேச்சுவார்த்தை தேவை : இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மிகப் பெரியவை. அவை முன்னேறி செல்வதற்கு ஒரு உரையாடலும் அதற்கான பேச்சுவார்த்தையும் தேவை. என ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். ராகுல் காந்தி தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு 6ஆம் தேதிக்குள் இந்தியா புறப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment