களத்தில் இறங்காமலே களப்பட்டியலில் இந்தியாவிற்கு 7ம் இடம்..!எப்படி..??

உலககோப்பை திருவிழாவானது இங்கிலாந்தில் கடந்த 30 தேதி கோலகலமாக தொடங்கியது.
இதில் போட்டியை சொந்த மண்ணில் நடத்தும் இங்கிலாந்து அணி மற்றும் ஆஸ்திரேலியா,இந்தியா.மேற்கிந்திய தீவுகள்,நியூசிலாந்து,வங்களா தேசம்,ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் ,தென்னாப்பிரிக்கா,இலங்கை ஆகிய பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்நிலையில் உலககோப்பை 6 போட்டிகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில்  மேற்கிந்திய தீவுகள் அணி அதிக ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
அடுத்த இடங்களில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, வங்களா தேசம்,பாகிஸ்தான் உள்ளது.
இதில் ஒரு  வெற்றியை கூட பதிவு செய்யாத தென்னாபிக்கா அணி 9வது இடத்திலும்,ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
இதுவரை எந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியோ அல்லது வெற்றியோ அடையவில்லை அதனால் இந்தியா 7 வது இடத்தில் உள்ளது.நாளை இந்தியா மற்றும் தென்னாபிக்கா இடையே பலப்பரீச்சை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது..

author avatar
kavitha