AUSvIND: 36 ரன்னில் சுருண்ட இந்தியா.. ஆஸ்திரேலியாவிற்கு 90 ரன் இலக்கு..!

நேற்று முன்தினம் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நேற்று 2-வது  நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 244 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதையடுத்து, இறங்கிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழக்க, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 53 ரன்கள் முன்னிலையுடன் நேற்று 2-வது இன்னிங்சை  இந்திய அணி தொடங்கியது. தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் களமிறங்கினர்.

2-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 9 ரன்கள் எடுத்த நிலையில், இன்று மூன்றாவது நாள்  ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்திலேயே இருந்து விக்கெட்டை இழந்து 36 ரன்னில் 9 விக்கெட்டை இழந்தனர். கையில் ஏற்பட்ட காயத்தால் முகமது ஷமியின் வெளியேறியதால் இந்திய அணி ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

இந்நிலையில், இந்திய அணி 36 ரன்கள் எடுத்தநிலையில் 90 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளது. புஜாரா, ரஹானே ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர். கம்மின்ஸ் 4 , ஹேசில்வுட் 5 விக்கெட்டை வீழ்த்தினர். மேலும், 46 வருடங்களுக்கு  பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் மிக குறைந்த ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி 36 ரன்கள் எடுத்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் எடுத்த மிகக்குறைவான ரன் இதுவாகும். இந்தியா 1974-இல் இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan