இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ள முதல் 5 மாநிலங்கள் ! இதில் தமிழகம் இடம்பெறவில்லை !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகளவிலுள்ள முதல் 5 மாநிலங்கள் !
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 29974 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 937 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7027   பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்தியவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 8590 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 369 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக குஜராத் 3548 பேர்கள், டெல்லியில் 3108 பேர்கள், மத்திய பிரதேசத்தில் 2368 பேர்கள், ராஜஸ்தானில் 2262 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்து உத்திர பிரதேசம், இந்தியா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் இடம்பெற்றுள்ளது.

author avatar
Vidhusan