இந்தியா – சீனா மோதல்! பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி டெண்டரை ரத்து செய்தது!

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி டெண்டரை ரத்து செய்தது.

கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்குப்பின் இந்தியாவில், சீனாவுக்கு எதிரான மனநிலை வலுத்து வருகிறது.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 59 செல்போன் செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.  இதனைத்தொடர்ந்து, பிஎஸ்என்எல் 4ஜி தர சேவை மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் பல்வேறு சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரப்பட்டு இருந்த நிலையில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், இப்போது சீன நிறுவனங்கள் எதையும் ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டாம் என பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனையடுத்து, பிஎஸ்என்எல்  நிறுவனம், 4ஜி டெண்டரை ரத்து செய்துள்ளதாகத்  செய்திகள் வெளியாகியுள்ளன.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.