தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள் மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள் கோவை நாமக்கல் ,சேலம் ,நீலகிரி ,ஈரோடு ,கரூர், தர்மபுரி ,வேலூர் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 5இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.