#INDvENG: 3-ம் நாள் ஆட்டம் முடிவு… இங்கிலாந்து வெற்றிக்கு 332 ரன்கள் தேவை

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி 253 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 78. 3 ஒவர்களில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அந்த அணியின் சுப்மன் கில் அபாரமாக விளையாடி 104 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி சார்பில் ரிஹன் அகமது 3 விக்கெட்களையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள். இதை தொடர்ந்து 399 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

#U19WC2024: அரையிறுதிக்குள் நுழைந்த 4 அணிகள்

இதையடுத்து இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 14 ஒவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. சாக் கிராலி 29 ரன்களுடனும், ரிஹன் அகமது 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றிக்கு இன்னும் 332 ரன்கள் தேவைப்படுகின்றது.

Leave a Comment