அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் : தினசரி பாதிப்பு 62 ஆயிரமாக அதிகரிப்பு!

அமெரிக்காவில் தினசரி கொரோனா பரவல் 60 ஆயிரத்திற்கும் அதிகமாக இருப்பதுடன், ஒரே நாளில் 809 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக்கூடிய கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனா பரவலை குறைக்க பல நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தாலும், அவ்வப்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா அதிகளவில் பரவி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 809 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தினசரி கொரோனா பாதிப்பு 62 ஆயிரமாக  இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கலிபோர்னியா, கொலராடோ, மசாசூசெட்ஸ், ஒரேகான், உடா, விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் அதிக அளவில் கொரோனா பரவல் இருப்பதாகவும், பரிசோதனை செய்யும் ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதாகவும் அமெரிக்க மருத்துவ குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal