கொரோனாவால் மெக்சிகோவில் அதிகரித்த சைக்கிள் பயன்பாடு!

கொரோனா அச்சத்தால் மேட்சிக்கோவில் சைக்கிள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும்  நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்துகள் முழுவதுமாக முடக்கப்பட்ட நிலையில் இருந்தது.தற்போது போக்குவரத்துக்கு அனுமதி அளித்திருந்தாலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பேருந்துகளில்  செல்ல அஞ்சுகின்றனர்.

இதனால் தற்பொழுது மெக்சிகோவில் பேருந்துகளில் செல்வதை மக்கள் தவிர்த்து தற்பொழுது அதிக அளவில் சைக்கிள் பயன்படுத்த தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றான மெக்சிகோவில் தற்போது சைக்கிள் விற்பனை அதிகரித்திருப்பதோடு, சுற்றுச்சூழல் மாசுபாடு மிகக் கணிசமாக குறைந்திருப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal