நாளை மறுநாள் தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ளும் மத்திய நிதியமைச்சர்..!

தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த  கனமழையால்  குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்ளிட்ட  அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இந்த தொடர் கனமழை எதிரொலியாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பில் இருந்து  தற்போது நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள்  மீண்டுவரும் நிலையில், ஒருசில இடங்களில்  மழைநீர் வடியாமல் உள்ளது. மழை நீரை அகற்ற அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 21-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வருகிறார். அதன்படி, நாளை மறுநாள் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் தூத்துக்குடியில்  மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். வெள்ள பாதிப்புகளை நிர்மலா சீதாராமன் நேரில் பார்வை பார்வையிடவில்லை என  எதிர்ப்புகள் எழுந்த நிலையில் நாளை மறுநாள் தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தகக்கது.

author avatar
murugan