நீடிக்கும் தேர்தல் பதற்றம்… மே. வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் குண்டு வீச்சு.! 

மேற்கு வங்கத்தில் டயமண்ட் துறைமுகம் பகுதி வாக்கு எண்ணும் மைய்யத்தில் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துளளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி சனிக்கிழமை அன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் அறிவித்த நாள் முதல் தற்போது வரை மேற்கு வங்கத்தில் குறிப்பிட்ட பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின. மேலும்  697 வாக்குச்சாவடிகளில் நேற்று மருவாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் 8 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் டயமண்ட் துறைமுகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு மிகவும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.