இந்த 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்கத் தடை..!

ராமநாதபுரத்தில் உள்ள சித்தார்கோட்டை , குலசேகரன்கால் ஆகிய கிராமங்களிலிருந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மண்  எடுப்பதாக குற்றம்சாட்டி இருந்தனர். இது தொடர்பாக பொதுநல மனுவில் மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் , அதிகமாக மண்  எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே மண் எடுக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதுபோன்ற பல மனுக்கள் நீதிபதி சத்தியநாராயணன், புகழேந்தி  முன் விசாரணைக்கு வந்தன.அப்போது  சவுடு மண் எடுப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழிகாட்டுதலை வழங்கி அவர்களது பின்பற்றவில்லை என நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே மதுரை கிளையின் வரம்பிற்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுப்பதை இடைக்கால தடை விதித்தனர்.

ஏற்கனவே அனுமதி வழங்கி இருந்தால் அவற்றை ரத்து செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 3-ம் தேதி ஒத்தி வைத்தனர்.

author avatar
murugan