அமெரிக்காவிலும் ‘ பேட்ட ‘வசூலை குவித்துள்ளது!!!!!எவ்வளவு தெரியுமா ?

சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடும் போட்டிக்கு நடுவே ‘பேட்ட ‘ நேற்று திரைக்கு வந்தது. படம் வெளிவந்த நாளை ரசிகர்கள் பொங்கல் திருவிழா போல் கொண்டாடி  வருகின்றனர். இந்த படம் தமிழகத்தை தாண்டி உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அமெரிக்காவிலும் இந்த படம் வசூல் சாதனை படைத்துள்ளது.

சூப்பர் ஸ்டாரின் படங்களுக்கு  உலகளவில் மார்க்கெட் உள்ளது அனைவருக்கும்   தெரிந்ததே. ஏற்கனவே திரைக்கு வந்த சிவாஜி, எந்திரன், லிங்கா, காலா, கபாலி, 2.0 என சூப்பர் ஸ்டாரின்  அனைத்து படங்களும் அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்தது. பேட்ட ‘படம் அமெரிக்காவில் 750K டாலர் வசூல் செய்து மீண்டும் சாதனை படைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில்’ பேட்ட ‘ படம் வெளி வந்த முதல் நாளில்  ரூ 5.28 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment