#INDvENG : ரோஹித், ஜடேஜா அதிரடி சதம்! முதல் நாள் முடிவில் இந்தியா 326 ரன்கள் குவிப்பு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று தொடங்கி நடைபெற்றது. அதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினார்கள்.

இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்ததாக சுப்மன் கில் டக்-அவுட் ஆகினார். ஒரு பக்கம் கேப்டன்ரோஹித் சர்மா நிதானமாக விளையாடி ரன்களை குவித்து கொண்டு இருந்தார். அடுத்ததாக ரஜத் படிதார் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

எம்.எஸ்.தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா ..!

அதன்பின் களத்திற்கு வந்த ரவீந்திர ஜடேஜா கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து ரன்களை குவிக்க தொடங்கினார். ஒரு பக்கம் ரோஹித் அசத்தலாக விளையாடி சதம் விளாச மற்றோரு பக்கம் ஜடேஜா அரை சதம் விளாசி அசத்தினார். பின் 131 ரன்களுக்கு ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஜடேஜா களத்தில் நின்று கொண்டு ஒரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த நிலையில் மற்றோரு பக்கம் களத்தில் சர்பராஸ் கான் ரோஹித் சர்மா எப்படி ரன்கள் குவித்து வந்தாரோ அதனை போலவே  அணிக்கு ரன் சேர்க்கும் நோக்கில் அதிரடியாக விளையாடி வந்தார். பின் 62 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  பிறகு ஜடேஜா சதம் விளாசி அசத்தினார்.

இந்நிலையில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ரவீந்திர ஜடேஜா 110*, குல்தீப் யாதவ் 1* ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள்.  இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மார்க் வூட் 3 விக்கெட்களையும், டாம் ஹார்ட்லி 1 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார்கள்.  முதல் நாள் ஆட்டம் முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடங்கும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment