இடைக்கால மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கு 10 சதவீதமாக உயருகிறது !!!!

14

2019-20 நிதி ஆண்டிற்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கு 10 சதவீதம்  உயருகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

2019-20 நிதி ஆண்டிற்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கு 10 சதவீதம்  உயர்ந்து ரூ.12 லட்சம் கோடியாக நிர்ணயிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை வரும்  பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில்  விவசாயக் கடன்  ரூ. 11லட்சம் கோடியாக நிர்ணயிக்கபட்டு இருக்கிறது. ஆனால் இனி வரும் ஆண்டுகளில் விவசாயக் கடன் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளாக விவசாயக்கடன் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 2019-20 நிதி ஆண்டிற்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடன் இலக்கை 10 சதவீதம்  அதிகரித்து ரூ.12 லட்சம் கோடியாக நிர்ணயிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.